கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,83,020 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் உலகம் முழுவதும் சுமார் 1,83,020 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,7423 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போதைய நிலவரப்படி 87,08,008 பேர் உலக முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு தென்அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 23, 56,657 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் இதுவரை 50,591 பேர் பிரேசிலில் பலியாகி உள்ளனர். பிரேசிலில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு உறுதி செய்ததை அடுத்து இந்த மரண எண்ணிக்கை வெளியாகி உள்ளது. #கொரோனா #உலகசுகாதாரநிறுவனம்