ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று விசவாயு கசிந்ததில் அதன் மேலாளர் உயிரிழந்துள்ளதுடன் 3 தொழிலாளர்கள் பாதிப்படைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பொலிமர்ஸ் என்ற இரசாயன தொழிற்சாலையில் கடந்த மாதம் 7-ம் திகதி விசவாயு கசிவு ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்ததுடன் பலர் இன்னும் சுவாச பிரச்சினை மற்றும் சரும பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் மீண்டும் அம்மாநிலத்தின் கர்னூல் மாவட்டம், நந்தியாலாவில் ‘எஸ்.பி.ஒய். அக்ரோ இன்டஸ்ட்ரீஸ்’ என்னும் இரசாயன தொழிற்சாலையில் நேற்று காலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதை அறிந்த தொழிலாளர்கள் இதுகுறித்து பொது மேலாளருக்கு தகவல் கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்ட நிலையில் மேலாளர் விசவாயுவால் மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தப்பி வந்த 3 பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் தீயணைப்புப் படையினர் விசவாயு கசிவை தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #ஆந்திரா #விசவாயுகசிவு #மேலாளர்