Home உலகம்ஒரு கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு – 5 லட்சத்தினை நெருங்குகின்ற உயிரிழப்பு

ஒரு கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு – 5 லட்சத்தினை நெருங்குகின்ற உயிரிழப்பு

by admin

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

மேலும்   கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.98 லட்சத்தைக் கடந்துள்ளதுடன் சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேiளை கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தைத் தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது #கொரோனா  #பாதிப்பு #உலகம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More