நாட்டு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார் என பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இயக்கச்சியைச சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்ற முன்னாள் போராளியே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
கடந்த 3ஆம் திகதி மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் செய்த போதே வெடிவிபத்து ஏற்பட்டது என்று பளை காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
வெடி விபத்தில் படுகாயமடைந்த நபரை கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக அனுராதபுர வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலையே சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வெடிப்பு சம்பவத்தையடுத்து அவரது மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே வேளை, முன்னாள் போராளிகள் பலர் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #இயக்கச்சி #முன்னாள்போராளி #வெடிபொருள் #உயிரிழப்பு