Home இந்தியாஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 28701 பேருக்கு கொரோனா -500 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 28701 பேருக்கு கொரோனா -500 பேர் உயிரிழப்பு

by admin

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 500 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இதுவரை 8,78,254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 5,53,471 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளடன் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் 3,01,609 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 254427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 140325 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10289 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 138470 பேருக்கும், டெல்லியில் 112494 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #இந்தியா #கொரோனா #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More