உலகம் பிரதான செய்திகள்

10 ஆயிரம் ஹொங்கொங் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை:

அவுஸ்திரேலியாவில் பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹொங்கொங் மக்களுக்கான விசாவினை நீட்டிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனா ஹொங்கொங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோர், தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்படலாம்

சீனாவின் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் ஹொஙn;காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்கி குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, அவுஸ்திரேலிய பிரதமர், ஸ்கொட் மாரிசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹொங்கொங் மக்களுக்கான விசாவை நீட்டிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தற்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி கல்வி மற்றும் பணி நிமித்தமாக அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள உள்ள ஹொங்கொங் மக்களுக்கு 5 வருடம் விசா நீட்டிப்பு வழங்கவும் இதன் வழியாக நிரந்தர குடியுரிமை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஹொங்கொங்கை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் அவுஸ்திரேலியாவுக்கு எதிர்காலத்தில் குடிபெயர வழிவகை செய்யப்படும் எனவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவின் ன் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா அவுஸ்திரேலியா இதற்காக கடுமையான விளைவை எதிர்நோக்கும் என எச்சரித்துள்ளது. #ஹொங்கொங்  #அவுஸ்திரேலியா #குடியுரிமை #சீனா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap