கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்களில் 444 பேர் புனர்வாழ்வு பெற்றவர்கள் எனவும் கொவிட்-19 தொற்று ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
மேலும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 64 பணியாளர்களுக்குக்கும் அவர்களுடன் பழகிய 44 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,697 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 1,32,796 பேருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் நேற்றையதினம் 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் தொற்றுக்குள்ளான 663 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 2,023 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. #கந்தக்காடு #புனர்வாழ்வுநிலையம் #கொரோனா #சுகாதாரஅமைச்சு