எங்களது பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்குச் செல்லும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்களாக தேர்தல் வாக்காளர்களில் அரைப்பங்கிற்கும் அதிகமாக உள்ள பெண்களாகிய நாம் உங்களுக்குக் கூறுவது:
மனிதர்கள் அனைவரதும் உரிமைகளையும், சமத்துவத்தையும் அச்சுறுத்தும் வகையில் உலக மற்றும் உள்நாட்டு அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள் மாறிவரும் – மாறக்கூடிய சமகாலத்தில் பெண்களதும் ஓரங்கட்டப்பட்ட மக்களதும் உரிமைகளை உறுதிப்படுத்த முதன்மைப்படுத்தப்பட்ட அக்கறை தேவை. அதிலும் கொரோனா போன்ற இயற்கை, சுகாதாரரீதியிலான அச்சுறுத்தல்களால் ஏற்படும் தாக்கங்கள் இவை அனைத்தினதும் விளைவான பன்முகத் தாக்கங்கள் பற்றி அதீத கவனமும் ஒருங்கிணைந்த முன்னெடுப்புக்களும் தேவை.
இந்தவகையில்
– கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையில் 61 வீதமான ஆன மக்கள் கடனாளிகளாகவே உள்ளார்கள் (புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கை-HIES-2016)
– மொத்த தொழில்துறையில் 58 வீதமான் மக்கள் முறைசாரா துறையிலேயே உள்ளார்கள். (தொழிலாளர்படை கணக்கெடுப்பு (Labour force survey) அறிக்கை 2018)
இலங்கையில்,கொரோனாவினால் ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக
– 30 வீதமான ஆன குடும்பங்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவினை குறைத்துள்ளனர்.
இது ஆகக் குறைந்தது 4 இல் 1 குடும்பம் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றது. (UN இன் இலங்கைக்கான சமூகபாதுகாப்பு மற்றும் பதிலிறுப்பு சுருக்க அறிக்கை யூன் 2020)
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இதில் குறிப்பாக வீட்டு வன்முறைகளை அதிகளவில் இடம்பெறுகின்றன.
இந்த வருடம் ஜனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பில் உள்ள ஒரு பெண்கள் அமைப்பிற்;கு மாத்திரம் 96 பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இதில் 87 சம்பவங்கள் வீட்டு வன்முறைகளாகும். அத்துடன் கொரோனாவினால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்த போது மட்டும் 23 வீடடு வன்முறைச் சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.
பெண்களுக்கெதிரான வன்முறைச் செயற்பாடுகள் தனிப்பட்ட நிகழ்வுகளல்ல. இவை பெண்களுக்கெதிரான மனித உரிமை மீறல்களாகும். பெண்கள் சுதந்திரமாக சுயாதீனமாக சமஉரிமையுள்ள பிரஜைகளாக வாழ்வதற்குரிய வாய்ப்புகளை இது மட்டுப்படுத்துகின்றது
பெண்களின் உடல், உள, மறுஉற்பத்தி நலன்கள்மீதான தாக்கங்களை ஏற்படுத்துவதன் ஊடாக முழுச் சமூகத்தையும் பாதிக்கின்றது. சமூகத்தில் அவர்களின் பங்குபற்றலை மட்டுப்படுத்துகிறது.
மேற்படி பின்னணியிலே நாம் கீழ்வரும் விடயங்களை வலியுத்துகின்றோம்
அரசியல்,அரசியலமைப்பு,சட்டம், சட்ட, நடைமுறை உட்பட குடும்பம், கல்வி, சுகாதாரம், சொத்துடைமை கொள்ளல், வாழ்வாதாரங்கள், வேலைவாய்ப்பு, பணியிடங்கள்; ஆகிய அனைத்து தளங்களிலும் பெண்கள் உரிமைகளை அனுபவிப்பதையும் அவர்களின் சமத்துவத்தையும் உறுதிசெய்தல் வேண்டும்.
1. பெண்களின் தொழில் உரிமைகள்
• பெண்களுக்கு தாம் விரும்பும் வேலையையோ, வாழ்வாதார செயற்பாட்டையோ தெரிவு செய்வதையும், அதன் ஊடாக வாழ்க்கைக்குரிய ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதையும் உறுதிப்படுத்தல் வேண்டும.;
• பெண்களின் பராமரிப்புப் பொருளாதாரப்பங்களிப்பு (நோயாளர், வயோதிபர், பிள்ளைகள் ஆகியோரை பராமரித்தல், துப்பரவாக்கல், வீட்டுவேலைத் தொழில் புரிவோர் ஆகியவை) உற்பத்தித்திறன் வேலையாக அங்கீகரித்து அதற்கான பெறுமதியும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
• பெண்களின் குடும்பத்திற்கும் சமூகத்திற்குமான பொருளாதாரப் பங்களிப்பு (குறிப்பாக முறைசாரா, குடும்ப பராமரிப்புசார் பொருளாதார பங்களிப்பு) முறையாக அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
• முறைசாராப் பொருளாதாரத்தில் ஈடுபடும் அனைவருக்கும்; வேலை செய்வதற்கான உரிமை, தொழிலாளர் உரிமை என்பன அடிப்படை உரிமைகளாகக்கொள்ளப்பட வழிவகை செய்தல் வேண்டும்
• தொழில்புரிவோரின் பிள்ளைகளை விடக்கூடிய தினப்பராமரிப்பு நிலையங்களை நிறுவுதல் வேண்டும்.
2. சமூகப்பாதுகாப்பு – சமுர்த்தி மற்றும் ஏனையவை
• பெண்களுக்கு சமூகப் , உணவு பாதுகாப்பு (குழழன ளநஉரசவைல) உறைவிடம், கல்வி மற்றும் சுகாதாரத்துக்குமான உரிமைகள் உறுதிப்படுத்தல் வேண்டும்.
• சமூகப் பாதுகாப்பு பற்றிய திட்டங்களை விரிவுபடுத்துதல். குறிப்பாக பெண்களின் அபிப்பிராயங்களை உள்வாங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குதல்.
• வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யக்கூடிய விதத்தில் கௌரவமான, யதார்த்தமான எல்லாருக்கும் பொhருந்தக்கூடிய ஒரேவிதமான அணுகுமுறையை சமுர்த்தித் திட்டத்தில் ஏற்படுத்தல் – குறிப்பாக சமூகப்பாதுகாப்பு தொகையை அதிகரித்து தகுதியுடைய அனைவருக்கும் பொதுவானதாக இது இருத்தலை உறுதிப்படுத்தல்.
• தற்போது காணப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுடன் அதற்குத் தகுதியாகவுள்ள பின்வரும் குழுக்களை இணைத்து விரிவாக்கம் செய்தல்: காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்கள், யுத்தம் மற்றும் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட நபர்களைப் பராமரிக்கும் பெண்கள், மாற்றுத்திறன் கொண்ட நபர்கள், விதவைகள், தனிப் பெண்கள் மற்றும் ஏனைய பொருத்தமான குழுக்கள்.
• எல்லாப்படிமுறைகளிலும் வெளிப்படைத்தன்மையும் தகுதியானவர்களின் தெரிவு சமூகப்பங்களிப்புடன் வெளிப்படைத்தன்மையாக இருத்தல்
• நடைமுறையிலுள்ள சமுர்த்தித்திட்டத்தை குறுகிய காலத்தில் சரிவர வழங்குவதற்கு ஏற்ப முகாமைத்துவச் சிக்கல்களைத் தவிர்த்தல். அங்கத்தவர்களை தேர்ந்து கொள்வதில் உள்ள நியாயமற்ற முறைமைகளை நீக்குதல், பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபட்ட செயன்முறைகளை தவிர்த்தல், மற்றும் அதிகாரிகள் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதோடு, தகவல் பரிமாற்றங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தல்.
• கொடுப்பனவுகளைப் பெறுவதில் சிரமங்கள், போக்குவரத்து, அதிக நேரம், குறித்த நாளில் வழங்காது மீண்டும் வரவைப்பது போன்ற இடர்பாடுகளை நீக்குதல்
• சமுர்த்திச் சேமிப்புகளை பெறுவதற்கான வழிமுறைகளை மக்களுக்கு தெளிவாக கூறுதல். சேமிப்புப் பணம் மற்றும் சமுர்த்தி வங்கியில் உள்ள பணம் எவ்வகையில் முதலீடு செய்யப்படுகின்றது எனத் தெளிவுபடுத்தல். வங்கியில் பங்குதாரர்களாக உள்ள சமுர்த்தி அங்கத்தவர்கள் வங்கியின் தீர்மானங்களில் பங்குபற்றகூடியதாக மாற்றுதல்
• சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் பங்காளர்களாகப் பெயரளவில் பெண்களை வைத்திருக்காது அவரவரது சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப்பாதுகாப்புத்திட்டங்களின் அனைத்துப் படிமுறைகளையும் தீர்மானித்து நடைமுறைப்படுத்துபவர்களாக பெண்களை அங்கீகரித்து நடைமுறைப்படுத்தல வேண்டும்;.
• நீண்ட காலநோக்கில்,சமுர்த்தித் திட்டத்தை மேம்படுத்தல். முக்கியமாக சமுர்த்தி பற்றிய பிரச்சனைகளை அறிந்துகொள்ள பொது விசாரணை ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கான வழிவகை செய்தல்
• முதியவர்களுக்கான மாதாந்த ஓய்வூதியத் தொகையை அதிகரித்தல் மற்றும் அதற்கான தகுதி வயதெல்லையை 60 ஆகக் குறைத்தல்.
• மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கான மற்றும் மாற்றுத்திறன் கொண்ட நபர்களைப் பராமரிக்கும் பெண்களுக்கான மாதாந்த உதவியை அதிகரித்தல்
• தனியான தாய்மார்களின் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளிலிருந்து தப்பி வாழும் நபர்களுக்கு அவர்கள் 18 வயதினை அடையும்வரை புலமைப்பரிசில்களை வழங்கல்.
• ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்களில் இலங்கை ஒப்புதல் வழங்கியதற்கிணங்க சமூகப் பொருளாதா உரிமையானது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
3. நாட்டின் குடி மக்களை வன்முறையிலிருந்து பாதுகாத்தல் (வீடுகளிலும், பரந்த சமுதாயத்திலும் முழு நாட்டிலும்)
• வீட்டு வன்முறைச் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தல் வேண்டும்.
• பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கான சட்ட நீதியை துரிதப்படுத்துவதற்காக ஏற்பாடுகளை செய்தல்
• சுயாதீனமான பெண்களை மையப்படுத்திய பெண்கள் காப்பகங்களை மாவட்ட மட்டத்தில் இயங்குவதற்கான வழிவகை செய்தல்
• மாவட்ட மட்டங்களில்; சட்ட வைத்திய அதிகாரிகளை நியமித்து அவர்கள் கட்டாயம் பால்நிலை கூர்திறன் மிக்கவர்களாக இருப்பதை உறுதிப்படுத்தல். அத்துடன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை உடனடியாக பாதிக்கப்பட்ட நபர் , கரிசனையுள்ள குடும்ப உறுப்பினர்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரும் முறையை ஏற்படுத்துதல்.
• திருமணத்திற்குள்ளான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குற்றமாகக் கருதி அது சட்டமாக்கப்படல் வேண்டும்.
• னுNயுபரிசோதனைகளை அரச சேவையாக்குவதுடன் இதற்காக போதியளவு நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வததை உறுதிப்படுத்தல்.
• பல்வகையாக பால்நிலை அடையாளங்கள் மற்றும் பாலியலில் ஈர்ப்பு (ளுநஒரயட ழசநைவெயவழைn) கொண்டோர் உள்ளிட்ட வகையிலான சமூகங்களால்ஓரங்கட்டப்படக் கூடிய குழுக்களுக்குரிய பாதுகாப்பை வழங்குதல் அரசின் பொறுப்பாக இருத்தல் வேண்டும். இவர்களுக்கான உரிமை சட்டமாக்கப்படுதலை உறுதிப்படுத்தல்;.
4. சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல்
1. பெண்கள் சுயாதீன ஆணைக்குழு
– வரலாற்று ரீதியானதும் கட்டமைப்பு ரீதியாகவுள்ள பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாரபட்சங்களுக்கு பதிலிறுப்பு செய்யும் வகையில் சுயாதீனமான பெண்கள் ஆணைக்குழு நிறுவப்படல் வேண்டும்.
2. பாரபட்சமின்மை குறித்த ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். இதன் குறிப்பான சில கடமைகளாக பின்வருவன இருக்க வேண்டும்.
– பால்நிலை, இனத்துவம், மதம், சாதி, பாலியல தெரிவுகள்;, விசேட தேவைக்குட்பட்டோர் போன்ற வேறு எந்த அடிப்படையிலும்;, எந்த ஒரு தனிநபரோ, சமூகக் குழுக்களோ பாரபட்சம் காட்டப்படாதிருப்பதற்கும் ஓரங்கட்டப்படாதிருப்பதையும் குறித்து இந்த ஆணைக்குழு ஆராய்ந்து பரிந்துரைகளை மேற்கொள்ளல்.
– பெண்களைப்பாராபட்சப்படுத்தும் வகையிலான தனியார் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும். உதாரணம் – முஸ்லிம் தனியார்சட்டம், தேசவழமைச்சட்டம்.
– (ஆள்சார்)தனியார் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது பால்நிலைக் கூருணர்வுமிக்கதாக இருப்பதற்காக அது தொடர்பான பன்முகநிலைப்பாடுகனை கவனத்தில் எடுக்கும் வகையில் பல்வேறு குழுக்களோடு கலந்தாலோசனைகளில் ஈடுபட்டு,பாரபட்சமற்ற வகையில் திருத்தங்களை விதந்துரைக்கக் கூடியதாக இருத்தல்.
– காணி தொடர்பான பாரபட்சமான அரச கொள்கைள், வழக்கங்கள், மரபுகள் ஆகியன பின்வருவனவற்றை அடிப்படையாக கொண்டவை. – பால்நிலை ரீதியாக பாரபட்சடான அரச சட்டம் (திருத்தப்பட்டவாறான 1935 ஆம் ஆண்டின் காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம்)
இத்தகைய,தற்போது நடைமுறையில் உள்ள காணிச் சட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் பொறிமுறைகளில் உள்ள பாரபட்சங்களை -குறிப்பாக பெண்கள் மீதான பாரபட்;சங்களை நீக்குவதற்காக காணி ஆணைக்குழுவுக்கான பரிந்துரைகளை மேற்ககொள்ளல்.
– நடைமுறையில் உள்ள சட்டங்கள், மற்றும் எழுத்து மூலமான சட்டங்களில் இருந்து எழக்கூடிய பெண்களுக்கெதிரான பாரபட்சம் குறித்த விடயங்களையும் இந்த ஆணைக்குழு பார்த்தல் வேண்டும்.
– இலங்கையின் கல்விமுறைமை பாடத்திட்;டங்கள் அனைத்திலும் அனைத்து மட்டங்களிலும் உள்ள பால்நிலை மற்றும் ஏனைய சமூக ரீதியான பாரபட்சமான விடயங்களை ஆராய்ந்து அவற்றை மாற்றுவதற்கான பரிந்துரைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்
5. பெண்களின் பிரதிநிதித்துவம்
பெண்களுக்கு; ஒரு கட்டாயக் கோட்டா பிரதிநிதித்துவத்தை அனைத்து மட்டங்களிலும் வழங்குதல் வேண்டும்.
எமது நாட்டின் மக்கள் தொகையில் பெண்கள் அரைவாசிக்கு மேல் உள்ளனர். எனினும் அனைத்து மட்ட ஆட்சிக்கட்டமைப்புக்களிலும் அவர்கள் மிக வரையறுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தையே கொண்டிருக்கின்றனர்.
– உள்ளுர், மாகாண, பாராளுமன்ற மட்டங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 50மூ ஆக உறுதிப்படுத்த ஒரு கட்டாயக் கோட்டாமுறை அரசால் உருவாக்கப்படல் வேண்டும்.
–
எங்களது பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்குச் செல்லும் பொழுது நீங்கள் பாரபட்சம் இன்மை சார்ந்தபின்வரும் விடயங்களுக்கு குறிப்பாகக் குரல் கொடுப்பீர்களென எதிர்பார்க்கின்றோம்.
• குடும்பத்தின் தனிப்பட்ட அம்சங்களிலும், பொதுவாழ்விலும் பெண்களின் சமத்துவத்தை சட்டரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் உறுதி செய்தல்.
• பெண்களின் அந்தஸ்தை தரம் குறைக்கும் அல்லது அவற்றில் தலையீடு செய்யும் விடயங்களுக்கும்,பெண்களின் நலன்களுக்கோ சுயமரியாதைக்கோ எதிரான சட்டங்கள் பண்பாடுகள், வழக்கங்கள் மற்றும் மரபுகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்தல், அவற்றை இல்லாதொழிக்கும் வகையிலான சட்ட முன்னெடுப்புக்களை மேற்கொள்ளல்.
• இனம், இனத்துவம், சாதி, வகுப்பு, மதம், மொழி, நம்பிக்கை, பால்நிலை, பாலியல் சார்புநிலை மற்றும் வேறு சமூகஅடையாளங்கள், விவாக நிலை, உடல், உள இயலாமை, அரசியல் அபிப்பிராயமும் இணைவுகள், தொழில், அரசு விரோதக்கிளர்ச்சி உள்ளிட்ட கடந்த காலநடத்தை என்பனவற்றின் அடிப்படையிலாயினும் (பாரதூரமான தவறுகளுக்காக குற்றத்தீர்ப்பு வழங்கப்ட்டிருக்காதவிடத்தில்) எவருக்கும் எதிராக பாரபட்சம் காட்டப்படல் ஆகாது.
• வயது வந்த சகல நபர்களுக்கும் இனம், தேசியநிலை, மதம், பால்நிலை அடையாளம் அல்லது பாலியல் ஈர்ப்பு என்பனவற்றின் அடிப்படையிலான எவ்வித வரையறைகளுமின்றி திருமணம் செய்து கொள்வதற்கும் ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்வதற்குமான உரிமை உள்ளது. அவர்களுக்கு திருமணம், திருமண வாழ்கை மற்றும் விவாகரத்து போன்ற சகல சந்தர்ப்பங்களிலும் சம உரிமைகளுக்கான உரித்து உண்டு என்பதை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்தல் வேண்டும்.
• கடந்தகால ஓரங்கட்டல்களையும் பாகுபாடுகளையும் கவனத்திற்கொள்ளும் வகையில், பெண்கள், மாற்றுத்திறன் கொண்டோர், வறியவர்கள், எழுத்தறிவற்றோர், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய சாதிக்குழுக்களின் அங்கத்தவர்கள் அல்லது ஏதாவது விசேடமாக இனம் காணப்பட்ட குழுக்கள் சமத்துவத்தை ஈட்டிக்கொள்வதற்கு அவசியமான குறிப்பான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுடன், அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பானது கிழக்கு மாகாணத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண் செயற்பாட்டாளர்கள், பெண்ணிலைவாதிகளைக் கொண்டு கடந்த 15 வருடங்களாக இயங்கி வரும் வலையமைப்பாகும்.
படைப்பாற்றலுக்கான வானவில் தூண்கள் என்பது இளம் பெண் செயற்பாட்டாளர்கள் குழுவாகும்.
யூலை 25, 2020
தொடர்புகளுக்கு:
அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பு (கிழக்கு மாகாண பெண்கள் வலையயமைப்பு)
இல. 4ஃ1, தோமஸ் வீதி, மட்டக்களப்பு
தொலைபேசி: 0652223297, 0652224657
மின்னஞ்சல் : றஉனஅடியவவiஉயடழயளூபஅயடை.உழஅ