இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 78 பேர் புதிதாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தப் பாதிப்பு 16 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 55 ஆயிரத்து 78 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 16 லட்சத்து 38 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் 15 லட்சம் இருந்த நிலையில் இன்று பாதிப்பு 16 லட்சத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 2-வது நாளாக நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 57 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. குணமடையும் சதவீதம் 64.54 ஆக அதிகரித்துள்ளதுடன் 5 லட்சத்து 45 ஆயிரத்து 318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 779 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக நேற்றையதினம் மகாராஷ்டிராவில் 266 பேரும் தமிழகத்தில் 97 பேரும் கர்நாடகத்தில் 83 பேரும் ஆந்திராவில் 68 பேரும் உத்தரப் பிரதேசத்தில் 57 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #இந்தியா #கொரோனா #பாதிப்பு