தமிழக சட்டசபையில் இன்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிரந்தர சட்டமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அந்த சட்ட மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி; பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதனை அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை மாணவர்களின் போராட்ட களத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியதே கலவரம் ஏற்பட காரணமாகி விட்டது என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசும், காவல் துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என தெரிவித்தார்.
மேலும் மெரீனாவில் இருந்து ஒரு மணி நேரத்தில் கலைந்து செல்வதாக தம்மிடம் மாணவர்கள் உறுதி அளித்தனர் எனவும் சென்னை மாநகரில் 7,000 காவலர்களும், 1000 துணை ஆய்வாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தற்போது சென்னையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.