குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை ஒத்தி வைப்பதற்கு, அரசாங்கம் முயற்சிப்பதாக ஜே. வி. பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மத்திய வங்கியின்பிணை முறி மோசடிகள் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் விவாதம் இன்று காலை 9.30 முதல் மாலை வரையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள அனுரகுமார திஸாநாயக்க இதனூடாக மத்திய வங்கி பிணை முறி தொடர்பான விவாதத்தை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்த இந்த விவாதத்தை நிறுத்த முயற்சிக்கப்படுவதாகவும் அரசாங்கத்தின் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.