குறைந்த வருமானம் பெறும் 1 இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் நாளை (02.09.20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானம் பெறும் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்த செயற்றிட்டத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த செயற்றிட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வித கல்வித்தகைமையும் இல்லாத அல்லது கல்வி பொது தராதர சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி தரத்தை கொண்டவர்களும் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதியிருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் நாளை முதல் இந்த வேலை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.