இன்று சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் இன்றைய தினம் விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் அவர் இன்று நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒன்றுகூடி 20 ஆவது அரசியலமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #நாடாளுமன்றம் #சபாநாயகர் #பிரேமலால்ஜயசேகர #அரசியலமைப்பு