Home இலங்கைபாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது

பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது

by admin

(க.கிஷாந்தன்)

வட்டவளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் இன்று (10.09.2020) அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் ஹட்டன் – கொழும்பு, மற்றும் ஹட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து தடைபட்டது.

இதனையடுத்து வட்டவளை காவல்துறையினா் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் 30 நிமிடத்திற்கும் மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் கொழும்பு, ஹட்டன், கண்டி வைத்தியசாலைக்களுக்கு சென்ற நோயாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்தோடு மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தொலைபேசி கம்பங்கள் மற்றும் மின்சார கம்பங்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது. #ஹட்டன் #கொழும்பு #போக்குவரத்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More