Home இலங்கைபுதிய தூதர்களின் பட்டியலில் – மிலிந்த – ரவிநாத், பாலித…

புதிய தூதர்களின் பட்டியலில் – மிலிந்த – ரவிநாத், பாலித…

by admin

6 நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

குறித்த பதவிக்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் தகுதிகள் பரிசீலனை செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஆப்கானிஸ்தானிற்கான இலங்கை தூதவராக ஓய்வு பெற்ற அத்மிரல் கே.கே.வீ.பீ ஹரிச்சந்திர த சில்வா,

ஜப்பானுக்காக இலங்கை தூதவராக சஞ்சீவ குணசேகர, அமெரிக்காவுக்கான இலங்கை தூதவராக ரவிநாத் ஆரியசிங்க,

பிரான்ஸிற்கான இலங்கை தூதவராக பேராசிரியர் ஷானிக ஹிரிபுரேகம, சீனாவிற்கான இலங்கை தூதவராக கலாநிதி பாலித கொஹொகன்ன,

இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்த மொறகொட ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த நியமனங்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் அதனை செப்டம்பர் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலமாக அறிவிக்குமாறும் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த இராஜதாந்திரகள் தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் அவர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More