ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் குறித்து தீர்மானிக்க கட்சியின் செயற்குழு இன்று (14.09.20) கூடவுள்ளது.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பல்வேறு தடவைகள் கட்சியின் செயற்குழு கூடி கட்சியின் தலைமைத்துவம் குறித்த கலந்துரையாடிய போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
எனினும் இன்றைய கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என ஐ.தே.க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளளவர்களில் ஒருவர் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு தெரிவுச் செய்யப்படவுள்ளார்.
தலைவர் தெரிவுச் செய்யப்பட்ட பின்னரே கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு உறுப்பினர் ஒருவர் பெயரிடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.