பாகிஸ்தானை சேர்ந்த அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் ஆதரவுடன் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிருந்த ஒன்பது தீவிரவாதிகளை மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தில் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியதில் குறித்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் ஆறு பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவி மக்களைக் கொன்று, நாட்டின் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்த தகவலுக்கமைய தேடதுல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடதுலின் போது அவா்கள் கைது செய்யப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மின்னணு சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதிய இலக்கியம், கூர்மையான ஆயுதங்கள், நாட்டு ரக துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் வெடிக்கும் சாதனங்களை தயாரிக்க உதவும் கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த அல்-கொய்தா தீவிரவாதிகளால் சமூக ஊடகங்கள் வாயிலாக தூண்டப்பட்ட இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் நிதி உதவியை திரட்டவும், மேலும் சிலர் டெல்லிக்கு சென்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் திட்டமிட்டிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் ல் தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் அந்தந்த மாநிலங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் அதன் பின்னா் விசாரணைகள் முழுவீச்சில் நடைபெறுமெனவும் தொிவிக்கப்பட்டுள்ளது #அல்-கொய்தா #இந்தியா #தாக்குதல் #புலனாய்வுஅமைப்பு #தீவிரவாதிகள் #கைது