Home இலங்கைவவுனியா தூய சதா சகாய அன்னையின் திருவிழா

வவுனியா தூய சதா சகாய அன்னையின் திருவிழா

by admin

வவுனியா சகாய மாதா புறம் தூய சதா சகாய மாதா ஆலயத் திருவிழா திருப்பலி    இன்று புதன் கிழமை(30)  காலை 7:15 மணிக்கி  மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்டர் சோசை  அடிகளாரின் தலைமையில்  கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.


திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சுரூப பவனியும், ஆசீர் வாதமும் வழங்கப்பட்டது.இதன் போது பங்குத்தந்தை அருட்பணி ஜெயபாலன் அடிகளார், வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி றாஜநாயகம் அடிகளார், உதவிப் பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார்,மகாறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்பணி மரியக்கிலைன் அடிகளார் ,அருட்பணி பெணி அடிகளார், தரனிக்குளம் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியசாமி அடிகளார், உற்பட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர் #வவுனியா #தூயசதாசகாயஅன்னை #திருவிழா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More