மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றிய தாதியர்களின் கவனயீனத்தால் 97 வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தோட்டவெளி ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் வசிக்கும் 97 வயதுடைய தாய் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக 1990 அம்புலன்ஸ் 5லம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவரைப் பரிசோதித்தை வைத்தியர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
உடனடியாக அவா் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதியர்கள் அலட்சியத்துடன் செயல் பட்டதாக தெரிய வந்துள்ளது.
அவரை உரிய முறையில் கவனிக்காது தமது தனிப்பட்ட வேலையில் ஈடுபட்டுள்ளதோடு,கையடக்க தொலைபேசியில் உரையாடலில் இருந்ததாக தெரிய வருகின்றது.குறித்த வயோதிப தாய்க்கு உரிய முறையில் சிகிச்சை வழங்காத நிலையில் சுமார் 4.30 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
-அண்மைக்காலமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக செய்திகள் வெளி வந்துள்ள போதும் இது வரை வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது #தாதியர்களின் #கவனயீனம் #உயிா் #அவசரசிகிச்சைபிரிவில்