தனது நாட்டு சக வீரரான நெஸ்ட்டா கார்ட்டர் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை பயன்படுத்தியுள்ளமை பரிசோதனையின் போது நிரூபிக்கப்பட்டதனால் ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் ஒன்றை திருப்பியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுடன் பந்தயத்தில் ஓடிய நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
நெஸ்டா கார்ட்டர் அளித்த சிறுநீர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான மெத்தில் ஹெக்ஸா நெமினேன் இருந்தமை மறு ஆய்வின் போது உறுதிப்படுத்தப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் ஆணையகம் தெரிவித்துள்ளதனையடுத்து ஜமைக்கா தடகள அணி தகுதியிழப்பு செய்யப்படுகிறதென ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.