துனிசியாவில் சட்டவிரோதமாக புலம்பெயர்தோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 21 போ் உயிாிழந்துள்ளனா்
ஆபிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் வாழ்வாதாரத்தை தேடி ஆபத்து நிறைந்த மத்திய தரைக்கடல்வழி பயணங்கள் மேற்கொண்டு ஐரோப்பா நோக்கி சட்டவிரோதமாக புலம்பெயர்வது வழமையாக உள்ளது. இதனால் பல சமயங்களில் விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஆபிக்காவின் பல நாடுகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோா் சிறு படகு ஒன்றில் மத்திய தரைக்கடல்வழி பயணம் மேற்கொண்ட நிலையில் குறித்த படகு
துனிஷியாவின் கடற்பரப்பில் உள்ள ஸ்பாக்ஸ் நகரில் இருந்து சற்று தொலைவில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு ப டையினா் 7 பேரை மாத்திரம் உயிருடன் மீட்கப்பட்டதுடன் முதலில் 11 போின் உடல்களை மீட்டிருந்தனா்.
தற்போது மேலும் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதனையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலாின் நிலைமை என்ன என தெரியாததால் அவர்களை தேடும் பணியை மீட்பு குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். #துனிசியா #சட்டவிரோத #புலம்பெயர்தோர் #படகு #விபத்து