Home இலங்கைஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவா் கைது

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவா் கைது

by admin

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் யாழ்.ஊடக அமைய சிரேஸ்ட உறுப்பினர்களுமான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன்  உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவா்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பக்கசார்பற்ற நடவடிக்கையை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றை ஊடக சந்திப்பின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தொிவித்துள்ளாா். #முல்லைத்தீவு #சட்டவிரோத #மரக்கடத்தல் #ஊடகவியலாளர்கள் #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More