Home இந்தியாடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம்

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம்

by admin

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. 

அரசு உத்தரவை மீறி யாராவது காற்று மாசினை ஏற்படுத்தினால் இந்த சட்டத்தின்கீழ் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்று மாசை தடுப்பதற்காக தனியாக ஒரு வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.


வட மாநிலங்களில் அறுவடை முடிந்த பிறகு காய்ந்த வைக்கோல்களை விவசாயிகள் எரிப்பதால் காற்று மாசடைந்து டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புகை மண்டலம் உருவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது #டெல்லி #காற்றுமாசு #அவசரசட்டம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More