வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பளை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (15.11.20) பிற்பகல் 2.15 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கொடூரச் சம்பவத்தில், செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த 43 வயதுடைய தனபாலசிங்கம் குணசிங்கம் என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தியவர் அல்லது நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பளை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.