Home இலங்கைமஹர சிறைச்சாலை – பலி எடுப்புகளும் அவலங்களும்!

மஹர சிறைச்சாலை – பலி எடுப்புகளும் அவலங்களும்!

by admin

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 107 பேர் தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகினற்னர் என காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறு காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக காயமடைந்த 71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுள் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#அஜித்ரோஹண #மஹரசிறைச்சாலை #ராகமவைத்தியசாலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More