Home இலங்கைவிளையாட்டாக கழுத்தில் சுருக்கிட்ட சிறுமி உயிரிழப்பு

விளையாட்டாக கழுத்தில் சுருக்கிட்ட சிறுமி உயிரிழப்பு

by admin

யன்னல் கதவின் பிணைச்சலில் பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று (நவ.30) திங்கட்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில், பருத்தித்துறை, புலோலி- சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

தாயாரும் தமையனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில்கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார்.சுருக்கு இறுகியதால் மாணவி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராஜா விசாரணைகளை முன்னெடுத்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி சுதேவா முன்னெடுத்தார்.

கழுத்தில் பாடசாலை பட்டி இறுகிக்கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #விளையாட்டாக #சுருக்கிட்ட #சிறுமி #உயிரிழப்பு #கழுத்துப்பட்டி #பருத்தித்துறை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More