குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியின் கூட்ட மேடையில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி எனப்படும் கருணா உரையாற்றியுள்ளார். தற்போது நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டமொன்று நடத்தப்பட்டு வருகின்றது. அங்கு தமிழ் மொழியில் கருணா உரையாற்றியிருந்தார்.
நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது தமிழ் மொழியில் உரையாற்றுமாறு கோரியதாகவும் அதன் அடிப்படையில் தாம் தமிழில் உரையாற்றுவதாகவும் கருணா சிங்களத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தாம் நன்றி அறிந்தவர் எனவும், மஹிந்த ராஜபக்ஸ நாட்டை மீட்டு எடுத்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். செய் நன்றியை எவரும் மறக்கக் கூடாது எனவும், தாய் நாட்டுக்கு வெற்றி உண்டாகட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
செய் நன்றியை எவரும் மறக்கக் கூடாது எனவும், தாய் நாட்டுக்கு வெற்றி உண்டாகட்டும் எனவும் குறிப்பிட்டுள்ள திரு. கருணாவுக்கு, சிறுபான்மையினரின் தேவை மற்றும் நலன் குறித்து ஒரு வரி தானும் பேசும் சிந்தனை இல்லையே? சிறுபான்மையினரின் துன்ப துயரங்களை எடுத்துக் கூறக் கிடைத்த மேடையை சரியாகப் பயன்படுத்தும் அறிவு இவருக்கு இல்லையே? நக்குவது நாய் என்றிருக்கும்போது, அதற்குச் செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதானே!
தான் வளர்த்த புலிகள் அமைப்பை திரு. மகிந்த ராஜபக்ஷ, இவரின் துணையுடன் அழித்தது உண்மையானால், அது அழிந்து 8 வருடங்கள் கடந்த பின்பு, இன்றும் அவர்களைத் தூற்றித்தான் வயிறு வளர்க்க வேண்டுமா? சொந்த அமைப்புக்குத் துரோகம் செய்தவர் செய்நன்றி பற்றிப் பேசலாமா?
இலங்கை என்னவோ எமது தாய்நாடுதான், என்றாலும் உரிமையிழந்து சொந்த நாட்டில் அகதிகளை விடக் கேவலமாக வாழ்க்கை நடத்தும் நாம், எமக்கே விடியல் இல்லாதபோது, ‘நாட்டுக்கு வெற்றியுண்டாகட்டும்’ என்று எப்படிச் சிந்திக்க முடியும்?