153
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இவர்களில் யாழ்.மாவட்டத்தின் பல இடங்களைச் சேர்ந்த 26 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொக்குவில்-1, தெல்லிப்பழை-3, அளவெட்டி-2, உரும்பிராய்-1, நவாலி-1, கீரிமலை-2, மானிப்பாய்-2, உடுவில்-2, இணுவில்-2, சங்கானை-1, பண்டத்தரிப்பு-1, சுன்னாகம்-2, கைதடி-1, ஏழாலை-3, காங்கேசன்துறை-1 மற்றும் சண்டிலிப்பாய்-1 என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். #யாழ்_போதனாவைத்தியசாலை #யாழ்ப்பாணம் #கொரோனா
Spread the love