Home இலங்கை மேல்மாகாணத்திலிருந்து வௌியேறுவோருக்கு 3இடங்களில் அன்டிஜன் பரிசோதனை

மேல்மாகாணத்திலிருந்து வௌியேறுவோருக்கு 3இடங்களில் அன்டிஜன் பரிசோதனை

by admin

மேல்மாகாணத்திலிருந்து வௌியேறுவோருக்கு இன்று முதல் மறு அறிவித்தல் வரை எழுமாறான அடிப்படையில்  துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.

இன்று(18) காலை 8 மணி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ள இந்த நடைமுறையில் பேருந்துகள் உட்பட வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு  எழுமாறான அடிப்படையில் இந்த பரிசோதனையை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொழும்பு- கண்டி வீதியில், நிட்டம்புவ எனுமிடத்திலும் கொழும்பு- அவிசாவளை வீதியில், கொஸ்கம, சாலாவ பிரதேசங்களிலும் கொழும்பு- சிலாபம் வீதியில் கட்டுநாயக்கவில் வைத்தும் இவ்வாறு அன்டிஜென் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி ​லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அ தொிவித்துள்ளாா்.

கொ​ரோனா வைரஸ் ​தொற்று, ஏனைய மாவட்டங்களுக்கு பரவாமல் இருக்கும் வகையிலேயே இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தொிவித்துள்ள அவா் காவல்துறையினா் சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் தலைமையிலான குழுக்களே இந்த பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொிவித்துள்ளாா். #அன்டிஜன்பரிசோதனை #மேல்மாகாணத்திலிருந்து #இன்றுமுதல் #கொ​ரோனா

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More