173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீதி சமிக்சையை மீறி போக்குவரத்து பிரிவு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருவர் நடந்து கொண்டமை தொடர்பில் வீதியில் நின்றவர்கள் கடும் விசனம் தெரிவித்து உள்ளார்கள்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,
திருநெல்வேலி சந்தி பகுதியில் உள்ள வீதி சமிக்சையில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருந்த வேளை , சமிக்சை விளக்கினை பொருட்படுத்தாது ,போக்குவரத்து பிரிவு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருவர் வீதியை கடந்து சென்றனர்.
வீதி சமிக்சை விளக்கினை மதித்து வீதியில் காத்திருந்தவர்கள் காவல்துறையின் இந்த செயற்பாடு தொடர்பில் கடும் விசனம் தெரிவித்தனர்.
Spread the love