அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் ஒவ்வொரு 33 நொடிக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வுத் தகவலை ரொய்ட்டேர்ஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 18ஆம் திகதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2, 50,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் ஒவ்வொரு 33 நொடிக்கும் ஒருவர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் எனவும் கடந்த ஏழு நாட்களில் 18,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேரளை சில நாட்களுக்கு முன்னர்தான் அங்கு பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது #அமெரிக்கா #கொரோனா #உயிாிழப்பு #கலிபோர்னியா #தடுப்பு_மருந்து