165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய இராணுவத்தினர் டமாஸ்கஸின் முக்கிய நீர் நிலையை கைப்பற்றியுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கி வருவதாக அரசாங்கத்திற்கு ஆதரவான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தலைநகருக்கு நீர் விநியோகம் செய்யும் முக்கிய இடமொன்றை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குறித்த பகுதியை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியின் உட்கட்;டுமான வசதிகளுக்கு ஏற்படுத்திய அழிவுகளினால் சில மாதங்களாக நீர் விநியோகத்தை உரிய முறையில் மேற்கொள்வதில் சிரமங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love