173
முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2010ம் ஆண்டு தொடக்கம் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்த பிரியங்கர, நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
எனினும் கடந்த டிசம்பர் 30ம் திகதி தனது இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பிரியங்கர, கடந்த வாரம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love