குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து , கணவன் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். அதனை கண்டு பதறிய கணவன் தீயை அணைத்து மனைவியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். வைத்திய சாலையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். #தீமூட்டியவர் #உயிரிழப்பு #தற்கொலை #மனைவி