யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பகுதியில் உள்ள 5 பாடசாலைகளில் தலா 50க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றனர் என அப்பிரதேச வாசி ஒருவர் தெரிவித்தார்.
சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலையே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
வளங்கள் உள்ள பாடசாலைகளுக்கு மேலும் வளங்களை கொட்டிக் கொட்டி கொடுப்பதனால் , பிரதேச மக்கள் தமது பிள்ளைகளை வளங்கள் அதிகமான பாடசாலைகளுக்கு அனுப்பவதற்காக தூர இட பாடசாலைகளை தெரிவு செய்து அனுப்புகின்றனர்.
அதனால் பிரதேச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது. தற்போது வலி. மேற்கு பிரதேச செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 5 பாடசாலைகளில் ஓவ்வொரு பாடசாலைகளிலும் 50 க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றனர்.
இவ்வாறான நிலை காணப்பட்டால் அப்பாடசாலைகள் மூடப்படும் நிலைக்கு செல்லும். எனவே ஊரில் உள்ள பாடசாலைகளின் வளங்களையும் மேம்படுத்தும் முகமாக வளங்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். #யாழ்ப்பாணம் #வலிகாமம் #பாடசாலைகள் #வளங்கள் #சங்கானை