Home இலங்கைசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

by admin

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன் , தண்டப்பணம் மற்றும் இழப்பீடு செலுத்தவும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 


சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்ற 15 வயதுடைய சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
அது தொடர்பில் சிறுமியால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்த காவல்துறையினர் , சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முறைப்படுத்தினார். 


மன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது. அந்நிலையில் நேற்றைய தினம் வழக்கு எடுக்கப்பட்டு , சந்தேக நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்று , மூன்று மாத சிறை தண்டனை விதித்து அதனை ஐந்து வருட காலத்திற்கு ஒத்தி வைத்ததுடன் , 1,500 ரூபாய் தண்ட பணம் விதித்ததுடன் , சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.  #சிறுமி #சிறை #தண்டப்பணம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More