வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 491 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் பயிலும் கேகாலையைச் சேர்ந்த மாணவனுக்கே தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த நிலையில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் இன்று மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தபட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 447 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் பூநகரி சுகாதார மருத்துவ அவர்கள் மூவரும் வலைப்பாடு தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார். #வடக்கு #கொரோனா #யாழ்_பல்கலை #மாணவன் #கேதீஸ்வரன்