172
திருகோணமலை துறைமுகத்திலிருந்து தொழிலுக்காக கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி சாகரா குமார – 4 என்ற இழுவைப் படகில் மீன்பிடிப்பறதகாக சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போன 7 மீனவர்களும் மாரவில மற்றும் பருதெல்பொல பகுதிகளைச் சேர்ந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கடற்படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். #திருகோணமலை #மீனவர்களை #காணவில்லை
Spread the love