சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை காயப்படுத்தியுள்ளது என்று இந்தோனேசியா கருத்து தெரிவித்துள்ளது.
சிரியா அகதிகள் நுழைய நிரந்தரத் தடையும், ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதித்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தடையில் இந்தோனேசியா நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்காவின் இந்த முடிவு வருத்தம் அளிக்கிறது என இன்று தெரிவித்துள்ள இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் அர்மனந்தா நாசீர் இம்முடிவு உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை காயப்படுத்தியுள்ளது எனவும் இது நிச்சயம் எதிர்மறையான விளைவை உண்டாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.