Home இலங்கைதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஜப்பான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஜப்பான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹொரவபொத்தான மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு திருகோமணலை துறைமுகத்தின் ஊடாக தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவித்துள்ள அவர் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More