Home இலங்கைதினேஷ் குணவர்தனவின் பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

தினேஷ் குணவர்தனவின் பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

by admin

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சர்வதேசக் குற்றங்களை மறுப்பதுடன் பொறுப்புக்கூறலை நிராகரிப்பதாக தொிவித்துள்ள வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை திட்டமிட்ட பிரசாரம் எனத் தொிவித்ததுடன் அதனை நிராகரிப்பதாகத் தொிவித்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வௌிவிவகார அமைச்சாின் கருத்தினைக் கேட்டதன் பின்னர், இலங்கை அரசாங்கத்திற்கு நீதியை பின்தொடர்வதற்கான நோக்கம் உள்ளது என எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்தநிலையில் தற்போது சா்வதேச பொறுப்புக்கூறல் அவசியமாகியுள்ளது என ஜோன் பிஷர் வலியுறுத்தியுள்ளார். #பொறுப்புக்கூறல் #ஜோன்பிஷர் #மனிதஉரிமைகள்பேரவை #தினேஷ்_குணவர்தன #மனிதஉரிமைகள்கண்காணிப்பகம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More