ஈராக்கில் உள்ள முஸ்லிம் மற்றும் கிறித்தவ மதத் தலைவர்கள் பகையை ஒதுக்கிவிட்டு அமைதி மற்றும் ஒற்றுமைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்
ஈராக் சென்றுள்ள போப் பிரான்சிஸ் அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா, ஜனாதிபதி பர்ஹம் சாலிஹ் ஆகியோரைச் சந்தித்தபின், ஈராக்கின் மூத்த ஷியா தலைவரான அயத்துல்லா அலி அல் சிஸ்தானியைச் சந்தித்துள்ளாா்.
சி ஸ்தானியுடனான சந்திப்பின் போது அவா் ஐஎஸ் தீவிரவாதிகளால் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தெற்கு ஈராக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட அவா் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போப் பிரான்சிஸ்
“முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு பொதுவான தீர்க்கதரிசியான ஆபிரகாமின் பிள்ளைகளாக சமாதானத்திற்காக வேண்டுவோம். இங்குள்ள கிறித்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்கள் தங்களிடையே நிலவும் பகைமைகளை நிறுத்திவிட்டு அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் இணைந்து பணியாற்ற வேண்டும். கடவுள் இரக்கமுள்ளவர். நம்முடைய சகோதர, சகோதரிகளை வெறுப்பதன் மூலம் அவருடைய பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். #ஈராக் #மதத்தலைவர்கள் #அமைதிக்காக #போப்_பிரான்சிஸ்