Home இலங்கைதிருக்கேதிஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு தற்காலிகமாக மீளமைப்பு

திருக்கேதிஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு தற்காலிகமாக மீளமைப்பு

by admin

மஹா  சிவராத்திரி எதிா்வரும் வியாழக்கிழமை சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திருக்கேதிஸ்வர ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் இடம் பெறவுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ் பிரதான வீதியில் இன்று தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.


திருக்கேதிஸ்வர ஆலய நிர்வாக சபையினர் மற்றும் திருத்தொண்டர்கள் இணைந்து அலங்கார வளைவை அமைத்ததுடன் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நுழைவு பகுதியில் சிரம தான பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இம் முறை கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் பங்களிப்புடன் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின் பற்றி திருகேதிஸ்வர சிவராத்திரி நிகழ்வுகள் மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. #திருக்கேதிஸ்வர #அலங்காரவளைவு #மீளமைப்பு #சிவராத்திரி #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More