வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரண்டு கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றிருப்பின் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது போதுமானது என சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
புதிய சுகாதார வழிமுறைகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது
நாட்டை சென்றடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், சகல தகவல்களையும் சமர்ப்பித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியை பெற வேண்டும் எனவும், நாட்டுக்குள் வருவதற்கு 96 மணித்தியாலங்களின் முன்னா் மேற்கொண்ட பரிசோதனைகள் மூலம் கொவிட் தொற்று இல்லை என்பதற்கான உறுதிச் சான்றினை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டை சென்றடைந்த 48 மணிநேரத்துக்குள் மீண்டும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #தனிமைப்படுத்துவது #சுகாதாரஅமைச்சு #இலங்கையர்கள் #கொவிட்_தடுப்பூசி