குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்ற உள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெளிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி முதல் அடுத்த மாதம் 28ம் திகதி வரையில் அமர்வுகள் நடத்தப்பட உள்ள நிலையில் 28ம் திகதி மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்ற உள்ளார்.
இலங்கைக்கு ஆதரவான மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்புக்களில் இலங்கை தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.