மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற அதேவேளையில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது.
ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்ற பெப்ரவரி 1 முதல் இப்போது வரை 260-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் சிவில் உரிமைகள் அமைப்புத் தொிவித்துள்ளது
பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்றுமுன்தினம் இரவு மண்டலே நகரில் உள்ள வீடுகளுக்குள் ராணுவத்தினா் திடீரென நுழைந்து போராட்டக்காரர்களை கைது செய்தனர்.
அப்போது மவுங் கோ ஹாஷின் பா என்பவரை கைது செய்ய ராணுவத்தினா் அவரது வீட்டுக்குள் நுழைந்தபோது அவரது 7வயது மகள் கின் மோ சிட் ராணுவத்தினரைக் ண்டு பயந்து தனது தந்தையை நோக்கி ஓடிய போது ராணுவத்தினா் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் இந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட 628 பேரை நேற்று ராணுவம் விடுதலை செய்துள்ளது எனவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது #மியன்மாா் #ராணுவம் #சிறுமி #பலி #ஆட்சிக்கவிழ்ப்பு