அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக் நிறுவனத்தின் சப்பாத்தில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் சப்பாத்தாக மாற்றி விற்பனை செய்கின்ற நிலையில் அந்த நிறுவனம் மீது, நைக் கம்பெனி வழக்குத் தொடுத்துள்ளது.
எம் எஸ் சி ஹெச் எப் என்கிற ப்ரூக்ளினைச் சேர்ந்த கலைப் பொருட்களை சேகரிக்கும் அமைப்பு, நைக் நிறுவனத்தின் ஏர் மேக்ஸ் 97 எஸ் ரக சப்பாத்தில் சில மாற்றங்களை செய்து ‘666 ஜோடி ஷூ’ என வெளியிட்டுள்ளது.
அவ்வமைப்பு ரப் பாடகர் லில் நாஸ் எக்ஸ் உடன் இணைந்து கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள கறுப்பு சிவப்பு நிற சப்பாத்தில் தலைகீழான சிலுவைச் சின்னம், பென்டாகிராம் எனப்படும் நட்சத்திரக் குறி, லூக் 10:18 என்கிற சொல் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த சப்பாத்தின் விலை 1,018 அமெரிக்க டொலா்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சப்பாத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் அவை முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் தொிவித்துள்ளனா்.
இந்தநிலையில் இது ஒரு பதிப்புரிமை மீறல் என தொிவித்துள்ள நைக் நிறுவனம் அமெரிக்காவின் நியூயோர்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில், எம் எஸ் சி ஹெச் எஃப் அமைப்பின் சப்பாத்துக்களை விற்பதைத் தடுக்க வேண்டும் எனவும், தங்கள் நிறுவனத்தின் இலச்சினையைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடுத்திருக்கிறது . அதோடு, இந்த மாற்றி வடிவமைக்கப்பட்ட சாத்தான் சப்பாத்துக்களை தாங்கள் அங்கீகரிக்கவில்லை எனவும் நைக் நிறுவனம் தொிவித்துள்ளது. #ரத்தம் #சாத்தான்_சப்பாத்து #நைக்