112
யாழ்.மாநகர சபையின் காவல் படை இன்று புதன்கிழமை முதல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் எண்ணக்கருவில் மாநகர சபை காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல் , ஒழுங்கு விதிகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறைகளை கண்காணித்தல் என்பவற்றுடன் , அவற்றை மீறுபவர்களுக்கு அவ்விடத்தில் தண்டப்பணம் அறவிடும் பணிகளை மேற்கொள்ளும்.
மாநகர சபையின் சுகாதார பணிமனையில் பணியாற்றும் உத்தியோகஸ்தர்கள் 5 பேர் இவ் காவல் படைக்கு உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான புதிய சீருடைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Spread the love