Home இலங்கையாழ்.நகரில் தொற்று இல்லாதவர்கள் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி

யாழ்.நகரில் தொற்று இல்லாதவர்கள் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி

by admin

  யாழ்.நகரில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படாத வர்த்தகர்கள் , பணியாளர்கள் தமது வர்த்தக நிலையங்களை நாளை வியாழக்கிழமை முதல் மீள திறக்க அனுமதிக்கப்படுவார்கள் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் , வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இன்றைய தினம் புதன்கிழமை  விளக்கமளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 
மேலும் தெரிவிக்கையில், 
யாழ். நகர் பகுதிகளில் இயங்கிய வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் , பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் ஒரு தொகுதிக்கான முடிவுகள் இன்றைய தினம் காலை கிடைக்கப்பெற்றன அதில் 54 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளன. மற்றைய தொகுதிக்கான முடிவுகள் இன்றைய தினம் மாலை கிடைக்கப்பெறும். 
அதனை தொடர்ந்து தொற்று கண்டறியப்படாத வர்த்தகர்கள் , பணியாளர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படுவார்கள். 


அதேவேளை , மண்டப நிகழ்வுகள், திருமணங்கள் , மரண சடங்குகள் பொது நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு உள்ள விதிமுறைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும். அத்துடன் யாழ். கல்வி வளையத்திற்கு உள்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 19ஆம் திகதியே மீள திறக்கப்படும் என தெரிவித்தார். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More