ஊசியைத் தெரிவு செய்யும் உரிமைஅடிப்படை சுதந்திரத்தில் அடங்காது!பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு”தடுப்பூசியைத் தெரிவு செய்கின்ற உரிமை அடிப்படைச் சுதந்திரத்தினுள் அடங்காது”(Choisir son vaccin n’est pas une liberté fondamentale-Choosing your vaccine is not a fundamental freedom) -பிரான்ஸின் நிர்வாக நீதிமன்றம் ஒன்றுஇவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறது.
எந்தத் தடுப்பூசியை ஏற்றுவது என்பதை தீர்மானிக்கின்ற உரிமையைத் தனக்கு வழங்குமாறு கேட்டுப் பொதுமகன் ஒரு வர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து வழங்கிய தீர்ப்பிலேயே நிர்வாக மன்றின் நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாரிஸ் Orléans பிரதேச நிர்வாக நீதிமன் றமே இவ்வாறு ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது என்று ‘பிரான்ஸ்புளு’ (France Bleu) செய்திச் சேவை தெரிவித்துள்ளது. Villemandeur என்னும் இடத்தில் வசிக்கும் ஒருவர் ஏப்ரல் 16 ஆம் திகதி தடுப்பூசி ஏற்றுவதற்கு மருத்துவர்களால் அழைக்கப்பட்டிருக்கிறார்.
பெரும்பாலும்அவருக்கான முதல் தடுப்பூசியாக “அஸ்ராஸெனகா” மருந்தே ஏற்றப்படும் என்று கருதுகின்ற அவர் அதன் பக்க விளைவுகள் குறித்த அச்சத்தால் “பைசர் – – பயோஎன்ரெக்” தடுப்பூசியை ஏற்ற விரும்புகிறார்.
அதற்கான அனுமதியைப்பெற்றுக் கொள்வதற்காக அவர் நீதிமன் றத்தை அணுகி உள்ளார்.அவரது மனுவை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் பின்வருமாறு தெரிவித் திருக்கிறார்.
‘கோவிட் 19’ தடுப்பூசிகளைத் தேர்ந்தெ டுப்பதற்கான உரிமையை அடிப்படைச் சுதந்திரங்களுடன் இணைக்க முடியாது. அவை உயிர் வாழ்வதற்கான உரிமை மற்றும் சுகாதாரத்தைப் பேணுவதற்கான உரிமையுடன் தொடர்புடையவை. அதேவேளை மருத்துவ அதிகாரிகள் தடுப்பூசியை ஊக்குவிக்குவிப்பதை அது கட்டாயம் என்ற அர்த்தத்தில் கருத முடி யாது.
அத்துடன் மனுதாரரது விருப்பப்படி அஸ்ராஸெனகா தடுப்பூசி பைசர் -பயோ என்ரெக் தடுப்பூசியை விடக் குறைந்த செயல்திறன் மிக்கது என்ற அறிவுறுத் தல் சுகாதார அதிகாரிகளால் பின்பற்றப் படவேண்டிய ஒன்றல்ல.-இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி யிருக்கிறார்.
“பிரெஞ்சு மக்களில் பத்துப்பேரில் ஏழு பேர் தடுப்பூசி ஏற்றும் விருப்பத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அஸ்ராஸெ னகா தடுப்பூசியை அவர்கள் ஏற்கவில் லை” – என்று முக்கிய கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகின்றது. இந்தக் கட்டத்தி லேயே நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் வெளியாகி இருக்கிறது.-
—————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.08-04-2021